Shri Arunachaleswarar Temple Thiruvannamalai


Arulmigu Unnamulai Amman and Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai
அருள்மிகு உண்ணாமுலை அம்மன் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை



Thiruvannamalai Arunachaleswarar Temple

Arulmigu Arunachaleswarar Temple - Thiruvannamalai !!

Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple Girivalam



திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கிரிவலம்

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

திருவண்ணாமலையே சிவம்

பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்! மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்! நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்.. இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது. அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், கிராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா மச்சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர், பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகாரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதமர், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர், சச்சிதானந்தர், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர், வாத சாந்த மகாரிஷி,

காலாட்டிச்சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர், ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர், தொழுகன்னிச்சித்தர்.... என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார் அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம். திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.





Arulmigu Arunachaleswarar Temple Thiruvannamalai




அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை


தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது. தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. கிரி வலம் சுற்றி வரும் போது எட்டு திசைகளிலும் எட்டு தனித்தனி லிங்கங்கள் அமைந்து உள்ளது.

1.இந்திர லிங்கம் (கிழக்கு)
இது முதல் லிங்கம் ஆகும். இது கிழக்கு நோக்கி உள்ளது. இதை தரிசித்தால் வளமும் நலமும் பெருகும்.

2.அக்னி லிங்கம் (தென்கிழக்கு)
இது இரண்டாவது லிங்கம் வலப்புறத்தில் உள்ளது. இதை வழிப்படுவதால் எல்லா நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

3.எம லிங்கம் (தெற்கு)
இது மூன்றாவது லிங்கம் ஆகும். இதை வழிப்படுவதால் பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

4.நிருத்தி லிங்கம் (தென்மேற்கு)
இது நான்காவது லிங்கம் ஆகும். இதை வழிப்படுவதால் எல்லா மனக்கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

5.வருண லிங்கம் (மேற்கு)
இது ஐந்தாவது லிங்கம் ஆகும். இதை தரிசிப்பதால் சமுதாய நலன் அடைவர்.

6.வாயு லிங்கம் (வடமேற்கு)
இது ஆறாவது லிங்கம் ஆகும். இது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நன்மை பயக்க கூடியது.

7.குபேர லிங்கம் (வடக்கு)
இது ஏழாவது லிங்கம் ஆகும். இதை வணங்குவதால் மன நிம்மதியும் பொருளாதாரமும் கிடைக்கும்.

8.ஈசான லிங்கம் (வட கிழக்கு)
இது கடைசி மற்றும் எட்டாவது லிங்கம் ஆகும். இதை வணங்குவதால் ஒருவருக்கு மன நிம்மதியும், கடவுளை நினைத்து வழிப்படும் ஆற்றலையும் கொடுக்கும்.



திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில்









Thiruvannamalai Arulmigu Arunachaleswarar Temple


the Names of some of the Important Theerthams are as Follows: Sivaganga and Brahma Theerthams are inside the Temple. On the eight sides of the thiruvannamalai hill are found theerthams sacred to the eight guardian angels of cardinal points namely 1.Indra Lingam, 2.Agni Lingam, 3.Yama Lingam, 4.Niruthi Lingam, 5.Varuna Lingam, 6.Vayu Lingam, 7.Kubera Lingam, 8.Esana Lingam. On the south-east and south are pandava Theertham, Vishnu Theertham, and Agasthiya Theertham and on the North Vasishta Theertham. On the Way up the hill there are the Mulaippaal Theertham and pathaTheertham. Apart from the Theertham round the hill in course of the circuit round it,there are the Seshadri Swamigal Sannadhi, Ramanasramam,Duruvasasramam,Gouthamasrmam, Adi Annamalai temple,Manikavasakar Temple, Durga Temple and Coral Hill. in the mid portion up the hill there are the kanthasramam, Virupaksha cave, Sadaisami cave and Mamarathu cave. It is hoary traditions, legendary lore, Literary, religious and devotional Litrature, Architectrural, Sculptural and epigraphical importance, its association with celestial beings, sages and saintly persons down to our present times, its importance in respect of Murthi, Sthalam and Theertham and the grand annual beacon festival- all these have contributed to the greatness of thiruvannamalai and its name and fame will ever be cherished till eternity.

The Name of this holy places are various, The common and popular name is Thiruvannamalai. Other Names are Arunachala,Arunagiri,Sonachala, Sonadri, Sonagiri,Sivaloka,Sthaleswararm, Arunapuri, Thiruvarunai.

The thiruvannamalai temple is situated east at tha bottom of the Thiruvannamalai hill half a mile west of the Railway Station, It faces East, It has got four Stately towers on all the four sides and four high stone walls like the rampart walls of a fort. The eastern tower called RAJAKOPURAM is the highest. The southern kopuram is called Thirumanjana kopuram.The Thiruvannamalai Temple Occupies an extent of about 25 Acres of land and is one of the Biggest in south India.

The Separate temple for Unnamalai Nayaki Amman or Abithakujambal Amman Temple is Situated in North western portion of the third prakaram.In the Maha mandapam in front of the Arthamandapam of this shrine we see the images of Kalanthakar, Veenadhaar, Veerabadrar Adhilakshmi, Santhana lakshmi, Gajalakshmi, Dhana Lakshmi, Dhanya Lakshmi Vijayalakshmi,Ayswarya lakshmi,Meenakshi And Sarsswathi.Inside the Garbagraha we see the Charming and gracefull Godess Unnamulai Amman, the inseparable partner of Shri Arunachaleswarar. The Sanskrit name for the Godess is Abithakukambal Amman.

Events at Arunachaleswarar temple Thiruvannamalai

1. Chithirai - 10 Days Vasantha Urchavam , 10 Days Thiruvizha Begining from Miruga Seerisha Nakshatram
2. Chithirai - thirunavukarasar Thiruvizha Sathaya Nakshathiram
3.Vaikasi - Thirunana Samanthar Festival - Mula Nakshatram.
4. Aani - Dakshinaya Brahma Urchavam - 10 Days
5.Aadi - Aadi Pooram for Unnamulai Amman - 10 Days.
6.Puratasi - 9 Days Navarathiri Thiruvizha for Unnamulai Amman.
7.Aipasi - Kantha Sashti- 6 Days
8.Karthigai - Bramha Urchavam, Karthigai Deepam Thiruvizha - 10 Days 9.Markazhi - Manikavasakar Thiruvizha - 10 Days,
10.Thai - Sankaranthi Thiruvizha - 10 Days
11. Panguni - Uthiram Festival - 6 Days





Thiruvannamali Arunachaleswarar Temple Opening Time

5.00AM To 12.30PM 4.00PM to 9.30PM


Thiruvannamali Arunachaleswarar Temple Girivalam | திருவண்ணாமலை திருக்கோயில்